மஹிந்த நாட்டுக்கு பணத்தைக் கொண்டு வந்தார், ரணில் என்ன கொண்டு வந்தார்?

பிரதமரின் சுவிஸர்லாந்து பயணத்தின் போது, 40க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொண்டிருந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வௌிநாட்டுக்கு விஜயம் செய்த கணக்குப் பற்றி பெரிதாக பேசப்பட்டதாக இதன்போது சுட்டிக்காட்டிய அவர், மஹிந்த ராஜபக்ஷ வௌிநாட்டுப் பயணங்களின் போது நாட்டுக்கு பணத்தை கொண்டுவந்ததாகவும், பிரதமர் இம்முறை கொண்டு வந்தது என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போட் சிட்டி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு சீனாவிடம் அரசாங்கம் மண்டியிடும் நிலைமையில் உள்ளதாகவும், முதலீட்டாளர்கள் இன்னும் வரவில்லை எனவும், பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Posts

About The Author

Add Comment