கிங் கானின் மகள் சுஹான கானின் சர்ச்சை போட்டோ!!

பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் ஷாரூக்கானுக்கு ஆர்யன், ஆப்ராம் என இரண்டு மகன்களும், சுகானா கான் என ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் லண்டனில் படித்து வருகிறார். இவருக்கு வயது 17 ஆகிறது. இவர் பல முறை தான் உடுத்தும் ஆடையால் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

கடந்த வருடம் ஷாருக்கான் மகள் சுஹானா கான், நீச்சல் குளத்தில் நீராடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்போது தனது தோழியுடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஷாருக்கானின் மகளான சுஹானாகான் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதைக்குறித்து பாலிவுட் கிங் கான் ஷாருக்கான், இது வெறும் வதந்தி, தனது மகள் லண்டனில் படித்துக்கொண்டு இருப்பதாகவும், திரைப்படங்களில் நடிப்பது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Loading...

Related Posts

About The Author

Add Comment