ஜனாதிபதி ஒன்றையும் பிரதமர் மற்றொன்றையும் கூறுகின்றனர்!

யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் பற்றி, ஜனாதிபதி ஒன்றையும் பிரதமர் மற்றொன்றையும் கூறுவதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்மையில் ஜனாதிபதி பிபிசிக்கு பேட்டியளித்த போது, தேசிய பொறிமுறை பற்றி மட்டுமே கூறியதாகவும், ஆனால் பிரதமர் வௌிநாட்டு உதவிகளை இந்த விசாரணைகளுக்காக பெற்றுக் கொள்வது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவேறு கருத்துக்களை வௌியிடுவது இதன்மூலம் தௌிவாவதாகவும் பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு ஒருவேளை இந்த யோசனையிலுள்ள விடயங்கள் தொடர்பில் சரியான புரிதல் இல்லாதிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment