போலீசையே போதையில் கல்லால் அடித்த பெண் -வீடியோ!

ஐதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில பல திரைப்பட ஸ்டூடியோக்கள் இயங்கிவருகிறது. அதுமட்டும் இன்றி அப்பகுதியில் சில முன்னணி நடிகர்களின் வீடுகளும் இங்கு உள்ளன. அப்பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவர் சரியான போதையில் இருந்தது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

அப்போது அந்த காரில் இருந்த ஒரு பெண், இறங்கி போலீசாருடன் சண்டை போட்டுள்ளார். அவரும் மது போதையில் இருந்ததால் போலீசார், மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து மீடியாவினர் சிலர் அந்த பகுதிக்கு வந்தனர். இந்த சம்பவத்தை சம்பவத்தை அவர்கள் வீடியோ பதிவு செய்தனர்.

அதை கண்ட அந்த பெண் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து மீடியாவினரை நோக்கி எறிந்தார். பிறகு விரட்டி விரட்டி எறியத் தொடங்கினார். போலீசார் அந்தப் பெண்ணை எச்சரித்தனர். பின்னர், அந்த பெண்ணை பற்றி போலீசார் வ்சாரனை செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ காட்சி….!

Related Posts

About The Author

Add Comment