கந்து வட்டி கொடுமையில் சிக்கிய நடிகை

சென்னை போரூரில் வசிப்பவர் ஆனந்தி (வயது 25). இவர் தாமரை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் நடனக்கலைஞராக உள்ளார்.

தனது உறவினர்களிடம் இவர் ரூ.5 லட்சம் கடனாக வாங்கினாராம். இதற்கு வட்டியாக ரூ.1.80 லட்சம் கொடுத்து விட்டாராம். ஆனால் காலியான வங்கி காசோலையில் இவர் கையெழுத்து போட்டதை பயன்படுத்தி, தற்போது ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டை எழுதிக்கேட்டு மிரட்டுகிறார்களாம். ஆசிட் வீசி விடுவதாகவும் பயமுறுத்துவதாக தெரிகிறது.

இது தொடர்பாக வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கும், முதல்–அமைச்சர் தனிப்பிரிவிற்கும் புகார் மனு அனுப்பி இருப்பதாகவும், நேரில் வந்தும் மனு கொடுக்கப்போவதாகவும், ஆனந்தி தெரிவித்தார்.

கந்து வட்டி கொடுமையில் சிக்கி நானும், எனது கணவரும் கடுமையான தொல்லை அனுபவித்து வருகிறோம், என்று ஆனந்தி கூறினார்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts

About The Author

Add Comment