சன்னி லியோன் திருமண புகைப்படம்!

இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின் மற்றம் அவரது கணவர் டேனியல் வெபர் திருமணம் செய்துக்கொண்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது!

தங்கள் திருமண வாழ்வினை நினைவுகூறும் வகையில் சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தினில் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த பதிவினிலில் தனது கணவருக்கு செய்தி ஒன்றினை தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது… “7 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் முன்பு சபதம் ஏற்றதுபோல் இன்றுவரை நாம் ஒற்றுமையாகவும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றோம். சபதம் ஏற்ற நாள் அன்று தங்கள் மீது கொண்ட அன்பினை விட தற்போது அதிகமாகவே இருக்கிறது. இந்த அன்பு எந்நாளும் தொடரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Sunny Leone

@SunnyLeone

7yrs ago we vowed in front of God to always love each other no matter what life throws at us!I can say that I love you more today then I did that day!We are on this crazy journey of life together!Love you so much @DanielWeber99 Happy Anniversary!!

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்ட அவர் ஆரம்பக்கட்டத்தில் பாலியல் தொடர்பான படங்களில் நடித்து வந்தார். பின்னர் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துக்கொண்டார். இங்கு தான் அவர் இயக்குனர் மகேஷ் பாத் அவர்களுடன் பரிச்சையமானார்.

அவரின் உதவியால் விரைவிலேயே பாலிவுட் படங்களில் கால் பதித்தார். 2012-ல் Jism-2, ஜாக்பாட்(2013) ராகினி MMS 2 (2014), எக் பெஹெலே லீலா(2015) என திரைப்படங்களை அடுக்கிக்கொண்டு வந்தார்.

பின்னர் விலங்குள் பாதுகாப்பு பிரிவான peta-வின் விளம்பரதாரராகவும வடிவெடுத்து சேவைகள் பல புரிந்து வந்தார். பின்னர் டேனியல் வெபருடன் தன் திருமண வாழ்க்கையினை தொடங்கினார். சமீபத்தில் இத்தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிரந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

About The Author

Add Comment