“ப்ளாக் ஷர்ட்” அணியும் ஆண்களை பெண்கள் ஏன் ரசிக்கிறார்கள் தெரியுமா?

பெண்களிடம் நாமாக வந்து கேட்கும் வரை அவர்களுக்கு எதெல்லாம் பிடிக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நாம் கேட்காமயே அறிந்துகொள்ளலாம்.

அந்த வகையில் கருப்பு நிற ஆடைகள் குறிப்பாக “ப்ளாக் ஷர்ட்” இதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். இதைத்தான் தனக்கு பிடித்த ஆண்களிடமும் ப்ளாக் ஷர்ட் அணிய அறிவுறுத்துகிறார்கள். இதன் காரணம் என்ன என்பதை சில ஆராய்ச்சிகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் அதை பற்றி மேலும் பார்க்கலாம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை வைத்து செய்த ஆராய்ச்சியில் அவர்களின் குணாதிசயங்களுடன் தொடர்புடைய வண்ணங்களை பற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீத பெண்கள் கருப்பு உடையும் ஆண்களை ரசிக்கின்றனர்.

அதன் முக்கிய காரணம் என்னவென்றால், கருப்பு உடையில் ஆண்கள் கவர்ச்சிகரமாகவும், அறிவார்ந்த மற்றும் நம்பிக்கையானவர்களாகவும், தனித்துவமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெண்களை போலவே ஆண்களில் 46 சதவீதத்தினர் கருப்பு உடை அணிந்திருக்கும் பெண்களை ரசிப்பதாகவும் இந்த ஆய்வில் அறியப்படுகிறது. ஆனால் பெண்களை காட்டிலும் ஆண்கள் இந்த உடையில் மிகவும் அழகாய் தெரிவதாய் சொல்லப்படுகிறது.

ஆக கருப்பு உடை அணிந்து வெளியில் செல்லும் ஆண்கள், நிச்சயம் இதில் சொல்லப்பட்டதை உணர்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Related Posts

About The Author

Add Comment