அஜித் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த அஜித் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி விரைவில் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாலிவுட்டில் அகிரா எனும் படத்தை இயக்கிவரும் முருகதாஸ், அடுத்ததாக தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபுவை இயக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படம் வெளியான பிறகே அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் முருகதாஸ். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பார் என சொல்லப்படுகிறது. அதற்குள் அஜித், ‘வீரம்’ சிவா மற்றும் விஷ்ணுவர்த்தன் இயக்கும் படங்களில் நடித்து விடுவார்.

Related Posts

About The Author

Add Comment