மாணவிகளை படுக்கைக்கு பயன்படுத்த முயன்ற பேராசிரியை சஸ்பெண்ட்

சமீபகாலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் திரையுலகினர் குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது உயரதிகாரிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து புரோக்கர் போல் செயல்பட்ட பேராசிரியை ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் கணித பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா தேவி. இவர் தனது வகுப்பில் படித்து வரும் 4 மாணவிகளை அழைத்து உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறும் இதனால் பணம், சலுகைகள் உள்பட பல்வேறு பயன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

ஆனால்

அந்த 4 மாணவிகள் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, மறைமுகமாக பேராசிரியை அந்த மாணவிகளை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் பேராசிரியை மாணவிகளிடம் இதுகுறித்து பேசிய 19 நிமிட ஆடியோ இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேராசிரியை தேவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் தான் பேசியது மாணவிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேராசிரியை தேவி விளக்கம் அளித்தார். இருப்பினும் அவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பேராசிரியை ஒருவரே உயரதிகாரிகளுக்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தால் மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment