அது நான் தான் ஆடியோவில் இடம் பெற்றுள்ள ஆசிரியை விளக்கம்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்லாமாவின் ஆடியோ குறித்து நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதை தொடர்ந்து காட்சி ஊடக பத்திரிக்கையாளர்கள் நிர்லாமாவின் வீட்டிற்கு அலைமோத நிர்மலா அந்த ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு நைட்டியுடன் வெளியே வந்த நிர்லமா அந்த ஆடியோவில் பேசியது நான் தான் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். மேலும் இந்த ஆடியோவின் காரணமாகத்தான் தன்னை கல்லூரி இடைக்கால நீக்கம் செய்துள்ளது என்பதையும் அவரே தெளிவுபடுத்துகின்றார்.

இந்த ஆடியோவை பரப்ப வேண்டாம் எனவும் ஆடியோவில் பேசியது நான் தான் ஆனால் அதில் சொல்லப்பட்டது நீங்கள் நினைப்பது போன்று இல்லை காமடி நடிகர் செந்தியில் பாணியில் விளக்கம் அளித்துள்ளார் நிர்மலா!

நிர்மலா அளித்த விளக்கமும் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

ஆளுநர் பெயரை கூறும் அளவிற்கு அந்த பெரும் புள்ளிகள் யார் இவருக்கு பின்னால் யார் இருக்கின்றார்கள் இது போன்று எத்தனை கல்லூரிகளில் நடக்கின்றது என்பதை சிபிஐ விசாரனை மூலம் அம்பலப்படுத்தி மாணவிகளின் எதிர்கால வாழ்கை இது போன்றவர்களால் நாசமாகாமல் தடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கோரிக்கை எழுந்து வருகின்றது.

இந்த பெண் ஆசிரியை பேசிய ஆடியோவை கேட்க

Related Posts

About The Author

Add Comment