தெறி டீசர் குறித்து வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்!

அட்லி இயக்கத்தில் ‘இளைய தளபதி’ விஜய் போலீசாக நடித்துவரும் தெறி படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 5-ம் தேதி திரைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த டீசரில் ‘தெறி’ விஜய்யின் பல தோற்றங்கள் இடம்பெறுமாம்.

மேலும் இந்த டீசர், கதையை கணிக்க முடியாத அளவு உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல்கள் வரும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Related Posts

About The Author

Add Comment