ஜாக்கிரதை… இந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்…

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எப்போதும் ஒரு விஷயத்தை எதிர்மறையாகவே பார்க்கக் கூடாது. அதேபோல் தான் ஜோதிடமும். அதை எதிர்மறையாக அணுகாமல் இயல்பாக எடுத்துக் கொண்டு, இன்றைய நாளை சிறப்பாக வழிநடத்திச் செல்ல அது ஒரு குறிப்பு என்று நினைத்துக் கொண்டால், நமக்கு வாழ்வில் தோல்வியே இருக்காது. எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

மேஷம் உங்களுடன் பணிபுரிபவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளுடனான அன்பு அதிகரிக்கும். குழந்தைகளும் உங்களைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். வியாபாரத்தில் சாதுர்யமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் மேலதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக மஞ்சளும்அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கிறது.

ரிஷபம் நெருங்கிய மற்றும் தாய்வழியில் உள்ள உறவினர்களிடம் பொறுமையோடு அனுசரித்துச் செல்லுங்கள். வெகுநாட்கள் கழித்து உங்களுடைய நண்பரை சந்திக்க நேரிடலாம். சுப செய்திகள் வந்து சேரும் நாள். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும் நாளாக இருக்கும். எதிர்காலத் திட்டமிடலில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழலே காணப்படும். நிலம், சொத்து விவகாரங்களில் சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெளிர்பச்சையாகவும், அதிர்ஷ்ட எண் 9 ஆகவும், அதிர்ஷ்ட திசை வடக்காகவும் இருக்கும்.

மிதுனம் வீட்டில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி, கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகமாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுநலனில் ஈடுபடுபவர்கள் பெரும் புகழ்அடைவார்கள். இன்றைக்கு உங்களுடைய ராசியான திசை கிழக்காகவும் அதிர்ஷ்ட எண் 7 ஆகவும் அதிர்ஷ்ட நிறம் நீலநிறமாகவும் இருக்கும்.

கடகம் சமூகத்தில் அந்தஸ்து உயர்வு கிடைக்கும் நாள். உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். உங்களடன் யாரேனும் போட்டி போட்டு விவாதம் செய்தால், அதில் நீங்கள் எல்லோரையும் தோற்கடித்து வெற்றி பெறுவீர்கள். வீட்டில் கணவன், மனைவி, குழந்தைகளுக்கு இடையே அன்பு பரிமாற்றம் அதிகரிக்கும். உங்களிடம் இருக்கும் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தும் நாளாக அமையும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு விஷயம் இன்று வெற்றிக்கனியாக மாறி உங்கள் கைகளில் கிடைக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெண்மையாகவும் அதிர்ஷ்ட எண் 5 ஆகவும் அதிர்ஷ்ட திசை 5 ஆகவும் இருக்கும்.

சிம்மம் ஊர் பெரியவர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயரும். இதுவரை நீங்கள் பணம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் தொழிலை விருத்தி செய்ய பெற்றோர்களின் ஆதரவும் உறுதுணையும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுக்கு ஆரஞ்சு நிறமும் 3 ஆம் எண்ணும் மேற்கு திசையும் அதிர்ஷ்டத்தைத் தருவதாக அமையும்.

கன்னி பயணங்களால் சோர்வும் விரய செலவுகள் உண்டாகும் நாளாக இருக்கும். பேச்சுத் திறமையால் எதிரிகளை வென்றுவிடுவீர்கள். இறை வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். வீட்டில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே விவாதங்கள் உண்டாகும். அதனால் பெரிய கருத்து வேறுபாடுக்ள கூட வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதனால் வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும் நாளாக இருக்கும். இன்றைக்கு தெற்கு திசை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திசையாக இருக்கும். அதேபோல் சிவப்பு நிறமும் 4 ஆம் எண்ணும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

துலாம் கடவுள் வழிபாட்டோடு இன்றைய நாளைத் தொடங்குவீர்கள். புனித யாத்திரைக்கான திட்டமிடல் கூட வீட்டில் நடக்கும். வெளியூருக்கு செல்ல வேண்டிய பயணங்களின் மூலம் பல நன்மைகள் காத்திருக்கின்றன. வாய்ப்புகளை நழுவ விட்டுவிடாதீர்கள். வீட்டில் உள்ள பெண்களின் மூலமாக பணவரவு உண்டாகும். வேலையிடத்தில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய ராசியான திசை கிழக்கு. ராசியான எண்1, ராசியான நிறம் பச்சை ஆகும்.

விருச்சிகம் இன்று உங்களை குழப்பி அதில் மீன் பிடிக்கப் பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு குழம்பாமல் உங்களுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். வேலையில் போதிய அளவு முன்னேற்றம் உண்டாகும். யாருடைய விமர்சனத்தையும் கண்டுகொள்ளாமல் உங்களுடைய வேலையில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தேவையில்லாத விவாதங்களில் யாரேனும் உங்களை உள்ளே இழுத்துவிட்டால் அதற்குள் நுழையாமல் ஒதுங்கிவிடுங்கள். இன்றைக்கு உங்களுக்கு 5 ஆம் எண்ணும் தெற்கு திசையும் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டம் மிக்கதாக இருக்கும்.

தனுசு சொத்து விவகாரங்களில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் ஒழிந்து, உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். உறவினர்களிடையே இருந்து வந்த பிரச்னைகளும் மோதல் போக்குகளும் விலகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உங்களுடைய திறமையான பேச்சுக்களால் புகழும் பெருமையும் உண்டாகும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கப்பெறுவீர்கள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட நிறம் வெண்மையாகவும் அதிர்ஷ்ட திசை மேற்காகவும் இருக்கப்போகிறது.

மகரம் புதிய சொத்து சேர்க்கைகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை சோதனை செய்து பார்க்க விரும்புவீர்கள். நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது கவனமாக இருங்கள். பொருள்கள் திருடு போக வாய்ப்புண்டு. உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சோர்வாகவே இருப்பீர்கள். புதிய பொருள் வாங்க முயற்சித்தாலும் தள்ளிப்போகும். உங்கள் முயற்சி வீணாகும். அதற்கு பதிலாக உங்களிடம் பொருள்களில் ஏதாவது ஒன்று கூட காணாமல் போகலாம். இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷடம் தரப்போவது தெற்கு திசையும் 7 ஆம் எண்ணும் ஊதாநிறமும் தான்.

கும்பம் நீண்ட நாள் நண்பரை திடீரென ஏதேனும் ஒரு பொது இடத்தில் சந்திக்க நேரிடலாம். அதன்மூலம் உங்களுடைய இளமைக்காலத்துக்கு போய், கொண்டாட்டமாகவும் குதூகலமாகவும் இருப்பீர்கள். வெளியூரில் தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மனமகிழ்ச்சியை தரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களால் பலன் அடைவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வார்கள். நீங்கள் தொட்ட காரியமெல்லாம் ஜெயமாகும். புகழின் உச்சிக்கு செல்வீர்கள். இன்று கிழக்கு திசை உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக அமையும். ராசியான எண் 8. உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் நீலம்.

மீனம் வாதத்தில் வெல்லும் நாள். சாதகமான முடிவுகளை மட்டுமே சந்திப்பீர்கள். வீட்டுக்குள் உறவினர்கள் வருவார்கள். அதனால் வீட்டில் குதூகலத்துக்குப் பஞ்சம் இருக்காது. வேலை இன்றைக்கு உங்களுக்கு வெளுத்து வாங்கப்போகிறது. பொருளாதார மேம்பாடு உண்டாகும். கடுமையான போட்டிகளையும் எளிதில் கடந்து வெற்றி பெறுவீர்கள். வெற்றி வாகை சூடும் நாள். இன்று நீங்கள் காவி நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதேபோல் 4 ஆம் எண்ணும் தெற்கு திசையும் உங்களுக்கு வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் தரும்.

Loading...

Related Posts

About The Author

Add Comment