தீபிகா படுகோணின் அழகான புகைப்படம்

‘பத்மாவத்’ படத்தில் நடித்த ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோண் நெருக்கமாக இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை தீபிகா படுகோண். ஷாருகான் நடித்த “ஓம் சாந்தி ஓம்” படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் ரன்வீர் சிங்குடன் இணைத்து “கோல்யான் கி ரஸ்லீலா ராம் லீலா”, “பாஜிராவ் மஸ்தானி” மற்றும் “பத்மாவத்” போன்ற மூன்று படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, மீண்டும் புதிய படத்தில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோண் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் மனீஷ் ஷர்மா இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் பெயரிடப்படாத இந்த படத்தை குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பலர் லைக் செய்து வருகின்றனர்.

புகைப்படம்:

 

Loading...

Related Posts

About The Author

Add Comment