முழுவிபரங்களுடன் சித்திரை மாத ராசிபலன்கள்

மேஷ ராசிபலன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உத்தியோகம் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் அரசு அதிகாரிகளுக்கு புதிய பதவி தேடி வரும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை நிலம் மூலம் பண வரவு அதிகரிக்கும் பேச்சில் காட்டத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள் கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு நகை நட்டுகள் வாங்கி கொடுப்பீர்கள் வீட்டுக்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள் நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மனதின் ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம் சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் வகையில் அலைச்சல் அதிகரிக்கும் அரசு பணியாளர்களுக்கு தொலை தூரத்திற்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் கோபம் அதிகரிக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் கலை காவியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் அதிகரிக்கும் வாகனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் பழைய வீட்டை வாங்கி பராமரிப்பு செய்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

மிதுனம் சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் செலவுகள் அதிகரிக்கும் இயந்திரங்கள் பழுது அடையலாம். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலை சிறப்படையும் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும் விலை உயர்ந்த துணிமணிகள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் பரம்பரை தொழில் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் அயல் தேசத்திற்கு பயணம் செல்வீர்கள்.

கடகம் சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் தொழிலில் பண வரவு அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் விருத்தியாகும் தொழில் கல்வி சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் உறவினர்களால் நன்மை உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுளின் அனுகிரகம் கிடைக்கும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும் வீண் விவாதத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

சிம்மம் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தூர தேசம் பயணம் செல்லும் நிலை உண்டாகும் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்பு துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் மேன்மை உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் உடன் பிறப்புகளால் மனக் கஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள் வெளியூருக்கு குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மனதில் குழப்பம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் உறவு நிலை சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும்.

கன்னி சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் தொல்லை உண்டாகும் உயர் அதிகாரிகளால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துகளில் பங்கு கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்குவீர்கள் விவசாயம் விருத்தியாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் பிரச்சினை வேண்டாம் தாய் வழி உறவினர்களால் தொல்லை உண்டாகும்.

துலாம் சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும் நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நெருப்பு காயம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு சகோதரர்களால் தொல்லை உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும் தேவையற்ற செலவுகள் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினையை தவிர்க்கவும் சகோதரிகளுடன் சச்சரவு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மன விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம் சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகளால் தொல்லை உண்டாகும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகை வியாபாரம் சிறப்படையும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் வியாபார வகையில் கடன் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலை காவியங்களில் ஆர்வம் அதிகரிக்கும் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் பண வரவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் சிறப்படையும் தொழில் நிலை மேன்மையடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகள் கிடைக்கும் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும்பொழுது கவனம் தேவை உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் உயர் கல்விநிலை சிறப்படையும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் வீட்டுக்கு அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் மந்தத் தன்மை உண்டாகும் மனதில் குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும் பூர்வீக சொத்தில் வில்லங்கம் உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

மகரம் சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் வீடு மனை நிலம் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் நல்லுறவு உண்டாகும் புதிதாக வீடு கட்டுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் திருக்கோயில் நற்பணிகளுக்காக நன்கொடை கொடுப்பீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடுகட்டி குடிபோவீர்கள் பெண்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக வெளிநாடு செல்வீர்கள் தொழிற்சாலை முதலீடுகள் அதிகரிக்கும்.. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவு உண்டாகும் மனதில் பாரம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம் சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள் வாகன யோகம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மன நிலை தெளிவாக இருக்கும் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம் சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் மூலம் பண வரவு உண்டாகும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் வாக்கு வன்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு ஆன்மீக பயணம் உண்டாகும்.

Loading...

Related Posts

About The Author

Add Comment