நீங்கள் தினமும் குக்கரில் சாதம் சமைத்து சாப்பிடுபவரா..?அப்ப இத படிங்க!

இன்றைய அவசர உலகில் சமையல் நேரத்தை மிச்ச படுத்த நவீன உபகரணங்கள் உதவியாக இருந்தாலும் அதனால் நோய்களும் அதிகமாகிறது. அந்த வகையில் குக்கர் சாதமும் குறிப்பிட்ட தக்கது. பொதுவாக குக்கர் சாதம் சாப்பிடும் பொழுது உடல்நல கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில் அலுவலகம் போகிற அவசரத்தில் விரைவில் எப்படி சமையலை முடிப்பது என கவலை படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் உதவியாக உள்ளது. என்பதை மறக்க முடியாது. அதே நேரத்தில் இந்த உபகரணங்கள் மூலம் செய்யும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது.

பொதுவாக குக்கரில் சாப்பாடு செய்து பொதுவான ஒன்று தான். ஆதனால் உடல்பருன் சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவு சத்து குறைந்து விடும். மேலும் இரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது.

ஆனால் குக்கரில் சமைக்கும் போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும். மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்க படவில்லை. அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதானால் தீடிரென இரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

அதேபோன்று சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. மேலும் நார் சத்து நிறைந்த கஞ்சி நீக்கபட்ட சாதமே சர்க்கரை நோயாலிகளின் இரத்த சர்க்கரையை அளவை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது. மேலும் குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்சினை தான்.

அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே அது மிகவும் நல்லது தான்.பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும்.

இப்படி வயிற்றுக்குள் உணவை தினிக்க தினிக்க பிரச்சினைகளும் அதிகமாகும் எனவே கூடுமானவரை குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாப்பாட்டை சாப்பிடுவதால் பல நோய்கள் நம்மை நெருங்க விடாமல் வைத்து இருக்கும்.-Source: tamil.samayam

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்……

Loading...

Related Posts

About The Author

Add Comment