2016ல் சந்தையை கலக்க வரும் புதிய கண்டுபிடிப்புகள்!

உலகம் தற்போது மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இந்த புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் நுகர்வோர் மின்சாதன கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

அதேபோல் 2016 ஆண்டுக்கான கண்காட்சி ஜனவரி 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கோலகலமாக நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு விரைவில் சந்தைக்கு வரவுள்ள சில முக்கிய பொருட்கள் பற்றி கீழே தறப்பட்டுள்ளது.

L’Oreal UV patch and MC10 BioStamp

MC10 நிறுவனம் மற்றும் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் முன்னணி நிறுவனமான லோரியல் இணைந்து தயாரித்துள்ள மை யூவி பேட்ச் என்ற இந்த கருவி நமது உடல் நலத்தை பேணுவதற்கு உதவியாக உள்ளது.

இதய வடிவில் உள்ள இதை நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் ஒட்டி கொள்ளலாம். நமது ஸ்மார்ட் போனை இதனுடன் இணைத்து நமது உடலின் சூரிய வெப்பத்தை தெரிந்துகொள்ளலாம்.

Lenova yoga mouse மற்றும் remote control

லெனோவா நிறுவனம் தயாரித்துள்ள இந்த கருவியை மவுஸ் மற்றும் ரிமோட் என இரண்டு விதமாக பயன்படுத்தலாம் என்பது இதன் தனி சிறப்பு. இதனை நேராக வைத்து நமது மடிக்கணனிக்கு ரிமோட்டாக பயன்படுத்தி பாடல் கேட்கலாம், படம் பார்க்கலாம் என பல்வேறு காரியங்களுக்கு உபயோகப்படுத்தலாம். அதனையே கொஞ்சம் வளைத்து மடிக்கணனிக்கு மவுஸாகவும் பயன்படுத்தலாம்.

கார் பயனர் கையேடு

பொதுவாக வண்டிகளில் பயனர் கையேடு என்பது புத்தக வடிவிலேயே இருக்கும் இதனால் பயனர்களுக்கு சிரமமே ஏற்படுகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்காக பயனர் கையேடு ஆப்ஸை உருவாக்கியுள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்வது மட்டுமே. வண்டியின் எந்த பாகம் குறித்து தகவல் தெரிந்துகொள்ள விரும்பினாலும் இந்த ஆப்ஸை கிளிக் செய்து குறிப்பிட்ட பாகத்தை பார்த்தவாறு உங்கள் மொபைலை காட்டுங்கள். அடுத்த நொடியே அந்த பாகத்தை பற்றிய அனைத்து தகவல்களும் உங்கள் மொபைலில் தோன்றும்.

இதன் மூலம் வாகத்தின் பாகங்கள் குறித்தும், அவற்றில் பழுது ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது என்பது குறித்தும் மிக எளிதாக நாம் அறிந்துகொள்ளலாம்.

Ili wearable Translator

Ili நிறுவனம் தயாரித்துள்ள இந்த கருவி வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த wearable Translatorஐ உங்கள் கழுத்தில் ஒரு சங்கிலியை போல் அணிந்துகொண்டால் போதும். இந்த கருவியில் உள்ள பட்டனை அழுத்தியவாறு உங்கள் மொழியில் நீங்கள் பேசினால் மட்டும் போதும். சில வினாடிகளில் உங்களுக்கு தேவையான மொழியில் உங்களில் வார்த்தைகள் சத்தமாக ஒலிக்கும். இதன் மூலம் மொழி தெரியாமல் தவிக்கும் சூழலை நீங்கள் தவிர்க்கலாம்.

தற்போது ஆங்கிலம், ஜாப்பனிஸ், சைனீஸ் ஆகிய மொழிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. விரையில் மேலும் பல மொழிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Sony Bravia 4K HDR Ultra HD TV

தொலைக்காட்சிகள் இல்லாமல் CES கண்காட்சி இல்லை என்பதற்கு ஏற்ப மிகப்பெரியது, மிக மெல்லியது, 4k திறன் வாய்ந்தது என ஏராளமான தொலிக்காட்சிகள் இந்தாண்டுக்கான கண்காட்சியில் இடம்பெற்றன.

அவற்றில் அனைவரையும் கவர்ந்தது Sony Bravia 4K HDR Ultra HD TV வகைகள் தான். 4k என்பது 1080p வகையை விட 4 மடங்கு தெளிவானதாகும். மற்ற தொலைக்காட்சிகளை விட சிறந்த Colour மற்றும் Contrast வசதிகள் கொண்ட இந்த தொலைக்காட்சி ஒரு திரையரங்கத்தின் அனுபவத்தை தரக்கூடியது என்பது இதன் சிறப்பம்சம்.

Related Posts

About The Author

Add Comment