கேரளாவின் முதல் Transgender ஜோடி!இஷாந்த் – சூர்யா,

கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் துணை நடிகையாக இருப்பவர் சூர்யா வினோத். ஆணாக இருந்து பெண்னாக மாறிய திருநங்கை.

இவருக்கு விரைவிலேயே திருமணம் நடைபெற இருக்கிறது. பெண்னாக இருந்து ஆணாக மாறிய இஷாந்த் தான் இவரை திருமணம் செய்ய காத்திருக்கின்றார். இவர்களின் திருமணம் குறித்து தான் தற்போது கேரள ஊடங்கள் முழுவதும் பரவலாக பேசி வருகிறது.

இந்த ஜோடி கேரளாவின் முதல் மாற்று பாலின தம்பதியராகும் பெயரினை பெற்றுள்ளனர். முன்னதாக சூர்யா திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தில் தனி வாக்காளர் அடையாள அட்டை பெற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.

மூன்றாம் பாலினத்வருக்கான உரிமைகள் கேரளாவில் மறுக்கப்படவில்லை என்ற பிம்பம் இதன் மூலம் உடைந்தாலும், இன்றும் அங்கு மூன்றாம் பாலினத்தவர்கள் துயரத்தினை அனுபவித்து தான் வருகின்றனர். இந்நிலையில் தான் தன்னுடைய திருமணைத்தை சட்ட ரீதியாக நடத்த வேண்டும் என தீர்மாணித்துள்ளது இந்த ஜோடி.

இந்நிலையில் தற்பொது இவர்களக்கு Special Marriage Act சட்டத்தின் கீழ் சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. விரைவிலேயே இவர்களது திருமணம் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...

Related Posts

About The Author

Add Comment