திருமணம் ஆகாமல் இலியானா தற்போது கர்ப்பமாகி இருப்பதாக தகவல் ?

தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் இலியானாவுக்கும், அவரது காதலருக்கும் திருமணம் ஆனதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இலியானா தற்போது கர்ப்பமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #IleanaDCruz

இந்தி படங்களில் நடிக்கும் இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் ஆண்ட்ரூவை கணவர் என்று கூறி இன்ஸ்டாகிராமில் இலியானா ஒரு தகவலை வெளியிட்டார். இதனால் இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி இலியானாவிடம் கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் நழுவினார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான அதிகாரப்பூர்வ செய்தி இதுவரை வெளியாகவில்லை. இதை இலியானாவும், அவருடைய காதலரும் இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில், இலியானா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இலியானா குளியல் தொட்டியில் சிரித்தபடி படுத்திருக்கும் புகைப்படத்தை இப்போது ஆண்ட்ரூ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இலியானா கர்ப்பமாக இருப்பது பற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. என்றாலும், இந்தி பட உலகில் இலியானா கர்ப்பமானதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

Loading...

Related Posts

About The Author

Add Comment