ராய் லட்சுமியின் பிகினி புகைப்படம்

நடிகை ராய் லட்சுமி தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார்.

சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். ‘காஞ்சனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழில் சுமார் 15-க்கு மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். கடந்த வருடம் அவர் இந்தியில் நடித்த படம் ‘ஜூலி-2’ வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சரியாக ஓடவில்லை.

ராய் லட்சுமி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் ஒரு படத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதில் அவர், “மனம் நம்புவதை உடல் அடைகிறது. நீங்கள் நம்புகிறிர்களா? சரியான பாதையில் செல்ல நேரம் இது. என்னுடைய நோக்கத்திற்க்கான சிறந்த முடிவு கிடைக்கும்” என கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts

About The Author

Add Comment