மூக்குத்தி அணிவது ஏன் தெரியுமா..? அப்ப இத படிங்க!

மூக்குத்தி அணிவது ஏன்..?!
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு.கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும்.அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும்.இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

மூக்குத்தி இடது புறம் அணிவதற்கு காரணம் உண்டு
மூக்குத்தி பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு அணிகலன். மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் இயற்கையாகவே அம்சமாக காட்சியளிப்பர். தற்பொழுது சில பெண்கள் முக்குத்தி அணிவது இல்லை. ஆனால் மூக்குத்தி அணிவதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு.ஆண்களுக்கு வலது பக்கமும், பெண்களுக்கு இடது பக்கமும் பலம் வாய்ந்தவை. இதனால்தான் சிலர் ஜாதகம் பார்க்கும் போது ஆண்களின் வலது கையையும் பெண்களின் இடது கையையும் பார்த்து ஜாதகம் சொல்வர்.மேலும் இந்த ஆண் பெண் பலத்தை உணர்த்தவே சிவனின் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் உள்ளது. இந்தக் கோலத்தில் சிவன் வலது பக்கமும் சக்தி இடது புறமும் காட்சி தருவர்.

நம் மூலையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் (Hypothalamus) என்ற பகுதி உடலில் இருக்கு பல்வேறு செயல்பாடுகளை இயங்க வைக்கவும், கட்டுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக ஹார்மோன் வெளிப்பாடு, வெப்பநிலை கட்டுப்பாடு, பசி, தாகம், தூக்கம், காமம் என உடலில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் மற்ற சுரப்பிகளுக்கு மூலமே இந்த ஹிப்போதலாமஸ்தான்.இடது புறத்தில் மூக்குத்தி அணியும் போது பெண்களின் வலது புற சுவாசம் பலமாகிறது. இதனால் வலது பக்க மூலையின் செயல்பாடுகள் அதிகமாகி இந்த ஹிப்போதலாமஸ் சீராக இயக்க உதவுகிறது.மேலும் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் பெரும்பாலானவை வலது புற மூலை இயக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன.

இதனால் வலது பக்க மூலை செயல்பாடுகளை அதிகரிக்க இந்த சுவாச மாற்றம் பெண்களுக்கு உதவுகிறது.பருவப் பெண்கள் மட்டும்தான் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர், இதற்கு காரணம் பருவம் எய்தவுடன் பெண்களின் நரம்பு மண்டலத்தில் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன. இந்த கெட்ட வாயு மூக்கு குத்துவதால் ஏற்படும் துவாரத்தின் வழி வெளியேற்றப்படுகின்றன.தங்கத்திலான மூக்குத்தி அணிவதால் உடலில் இருக்கும் வெப்பத்தை இந்த தங்கம் கிரகித்து தன்னுள்ளே வைத்துக் கொள்ளும். இதனால் பெண்களின் உடல் வெப்பம் சீரடைகிறது. அதிக வெப்பத்தினால் ஏற்படும் உணர்ச்சி வெளிப்பாடுகளை இது தடுக்கிறது.

இவ்வாறு இடது புறம் மூக்குத்துவதால் பெண்களின் ஒற்றைத்தலைவலி, பார்வைக் கோளாறு, சளி தொல்லை. மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. இடது பக்கம் மூக்குத்துவதால் வலது புற சுவாசம் சீராகுகிறது. இதனால் பெண்களின் சிந்தனா சக்தி மற்றும் மன ஒரு நிலைப்படுகிறது.ஆக பெண்களே நீங்கள் இடது புறம் மூக்குத்தி அணிவதுதான் சிறப்பு. ஒரு வேளை வலது புறம் முக்குத்தியிருந்தால், இடது புறத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்! உங்களின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related Posts

About The Author

Add Comment