செல்வாக்குமிக்க 100-பேர் பட்டியலில் விராட் தீபிகா,கோஹ்லி, தேர்வு!!

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் பத்திரிகை ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் உலக அளவில் ஆய்வு நடத்தும்.

பின்னர், ஆய்வின் முடிவில் அந்த ஆண்டிற்க்கான உலகின் செல்வாக்குள்ள 100 மனிதர்களின் பட்டியலை வெளியிடும்.

அதன்படி, இந்த ஆண்டிற்க்கான உலக அளவில் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை டைம் பத்திரிகை நேற்று வெளியிட்டது.

அதில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஓலா நிறுவன இணை நிறுவனர் பவிஷ் அகர்வால், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Virat Kohli

@imVkohli

Thank you @sachin_rt paaji for such warm and encouraging words. Truly honored for being able to make it to the @Time‘s 100 list. 🙏😇

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள விராட் கோஹ்லிக்கு சச்சின் தன்னுடைய பக்கத்தில் அதன் வீடியோவை ஷேர் செய்து வாழ்த்தியுள்ளார். அதற்கு கோஹ்லியும் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இந்த 100 பேரில் இந்தியாவை சேர்ந்த ஒரே ஒரு விளையாட்டு வீரர் கோஹ்லி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய சினிமா உலகில் இருந்து தீபிகா படுகோன் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளார்.

PRIYANKA

@priyankachopra

So happy and proud to see my friends @deepikapadukone and @imVkohli on the list.. Big congratulations and so well deserved

Related Posts

About The Author

Add Comment