கார்த்தி பட வில்லன்மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்

கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், பையா படங்களில் நடித்த நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். #MilindSoman #AnkitaKonwar

கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், பையா படங்களில் நடித்த நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமனுக்கு வயது 52. இவர் அங்கிதா கொன்வர் என்ற 26 வயது பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இருவரும் பிரிந்துவிட்டதாக செய்தி பரவியது.

இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கும் வகையில் சிரித்தப்படியே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கும் படத்தை வெளியிட்டனர். இப்போது, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் மிலிந்த் சோமன் அவரது மகள் வயதுள்ள அங்கிதா கொன்வரை மணக்கிறார்.

இதுபற்றி கூறிய மிலிந்த், “மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணமா என்கிறார்கள். எனக்கு மற்றவர்கள் பேசுவது பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களைப்பற்றி எதுவும் தெரியாது” என்றார்.

மிலிந்த்சோமன் முதன்முதலாக அங்கிதாவை சென்னையில் உள்ள இரவு விடுதி ஒன்றில் தான் சந்தித்திருக்கிறார். அதன்பிறகு செல்போன்மூலம் காதலை வளர்த்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள். 4 வருட காதல் கனிந்து இப்போது திருமணத்தில் இருவரையும் இணைக்க இருக்கிறது. #MilindSoman #AnkitaKonwar

Loading...

Related Posts

About The Author

Add Comment