விக்னேஸ்வரன் – த.தே.கூ விரிசல் தீவிரம்?

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்றில், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியில் இருந்து முதலமைச்சரை விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு முதலமைச்சர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு நியாயமான காரணம் இல்லாமல் எதற்காக தாம் அதில் இருந்து விலக வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கும், அவருக்கும் இடையில் தீவிர முறுகல் நிலை உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment