டிவி நடிகை தீ வைத்து தற்கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி!!

கேரளாவில் தொலைக்காட்சி சீரியல் பிரபல நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மலையாள சீரியல் நடிகை கவிதா. இவருடைய கணவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து தனது 4-வயது மகளுடன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, பள்ளியில் கோடை விடுமுறை என்பதால் கவிதா தன்னுடைய மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைத்து வந்த காவல் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

Related Posts

About The Author

Add Comment