ராஜ்குமார் ஹிரானி-ன் சஞ்சு பட டீஸர்!

பாலிவுட் இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான திரைப்படம் சஞ்சு. இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஆகும். ரன்பீர் கபூர் நடித்துள்ள இப்படம் பாலிவுட்டில் அதிக எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக பிரபலங்களை நடிக்க வைத்துள்ளனர். இப்படத்தில், அனுஷ்கா ஷர்மா, சோனம் கபூர், தியா மிர்ஸா, போமன் ஈரானி, விக்கி கௌஷல், கரிஷ்மா தன்னா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு புனேயில் உள்ள யெர்வடா சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட சஞ்சய் தத் என்பவரின் வாழ்க்கை சாந்தமான படமாக்கும்.பாலிவுட் நட்சத்திரங்கள் சுனில் தத் மற்றும் நர்கிஸ் தத் ஆகியோருக்கு மகனாய் பாலிவுட்டில் நுழைந்த சஞ்சய் தத் பின்னாளில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார்.

போதை வஸ்துக்கு அடிமை, 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் தொடர்பு, சிறைவாசம், நட்சத்திர குடும்பத்தில் வாரிசு வாழ்க்கை எனப் பலதரப்பட்ட வாழ்க்கையை அனுபவித்து வருபவர் சஞ்சய் தத். இப்படத்தில் ரன்பீர் கபூர், சோனம் கபூர், மனிஷா கொய்ராலா, ப்ரேஷ் ராவேல் எனப் பலரும் நடித்துள்ளனர். சஞ்சு படம் ஜூன் 29-ம் தேதி வெளிவருகிறது.

Loading...

Related Posts

About The Author

Add Comment