இணையத்தை கலக்கும் நூரின் ஷெரிப்!

மாணிக்ய மலரே பூவி’ புகழ் நூரின் ஷெரிப் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது!

தமிழ் திரையுலம் உள்பட நாடுமுழுவதும் இணையத்தில் தேடும் அளவிற்கு ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா ப்ரகாஷ் வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல்  திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பானிக்கு தொகுப்பு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர். இந்த வீடியோவில் இருந்த பிரியா வாரியர் மட்டம் இளசுகளின் மனதினை கொள்ளையடிக்க வில்லை, மற்றொரு நடிகையுமான நூரின் செரிப் என்பவரும் பலரால் நோட்டம் விடப்பட்டார்.

 

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா  வாரியர். அவரின் அருகில் அமர்ந்து அமைதியான அசைவுகளால் சிலரது மனதை கவர்ந்தார் நூரின்.

பிரியா வாரியரின் புகைப்படங்கள், வீடியோக்கள் என இணையத்தில் வைரலாக பல பகிரப்பட்டு வரும் நிலையில், நூரின் செரிப்பை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

இந்நிலையில் தற்போது நூரின் ஷெரிப், பாரம்பரிய உடையான புடைவையில் பரதநாட்டியம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது!

Loading...

Related Posts

About The Author

Add Comment