சிக்கா வைரஸ் தொற்றை கண்டறிய விசேட பரிசோதனை

லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களிடம் சிக்கா வைரஸ் தொற்று உண்டா என்பது கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ள பண்டாரநாயக்கா விமானநிலையத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நுளம்பினூடாக வேகமாக பரவும் சிக்கா வைரஸ் தொற்றை இலங்கைக்கு பரவவிடாமல் தடுப்பதற்காக நாட்டுக்கு வரும் லத்தின் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த உல்லாசப்பிரயாணிகள் முழுமையாக பரிசோதனைக்குட்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளால் பரப்பப்படும் சிக்கா நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகளே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

[b]AR[/b]

Related Posts

About The Author

Add Comment