இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளுக்கிடையில்,புதிய பஸ் போக்குவரத்து துவக்கம்!

இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளுக்கிடையில், நட்புறவை வளர்க்கும் வகையில், இந்த புதிய பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த மூன்று நாடுகளுக்கு இடையில் முத்தரப்பு கூட்டம் வீடியோ கான்பரன்சிங்’ மூலம் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பஸ் போக்குவரத்துக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதன் முன்னோட்டமாக, வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து, இந்தியா வழியாக நேபாளத்துக்கு நேற்று முன் தினம் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.

தாகாவில் இருந்து, 45 பயணியருடன் புறப்பட்ட பஸ், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி வழியாக இன்று நேபாளத்தை சென்றடையும்.

இதையடுத்து வங்கதேசத்தின், ரங்பூரிலும், இந்தியாவில், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியிலும், இரவு நேரத்தில் பயணியர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Loading...

Related Posts

About The Author

Add Comment