கணவர் உங்களிடம் எந்த விசயத்தை மறைக்கின்றார் தெரியுமா ..?

உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ? கெட்ட விஷயமோ?. மனைவியிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பது என்பது மனித இயல்பு. இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்கு தலை வெடித்துவிடும்.

இத்தகைய ரகசியங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை அறிந்து கொள்ள விருப்பமா?. பொதுவாக ஆண்கள் இதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். அல்லது அது குறித்து பேச மாட்டார்கள். அவர்களை
நம்ப செய்து கட்டாயப்படுத்தும் வரை ரகசியம் வெளியில் வராது. மனைவிகளிடம் இருந்து ஆண்கள் மறைக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே பார்ப்போம்.

1. கடந்த காலம்

திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் இருவரும் தங்களது கடந்த வாழ்க்கை குறித்து பேசுவார்கள். இதில் சில குறிப்பிட்ட விஷயங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இதை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். உறவு முறைகள் குறித்து பேசுவார்கள். ஆனால் அனைத்து உறவு முறை குறித்தும் பேச மாட்டார்கள். ஆண்கள் பெரும்பாலும் தங்களது கடந்த கால உறவு முறைகளை மறைப்பார்கள். இதில் சிறிய அளவை மட்டும் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பின்னர் இதர வழிகள் மூலம் மனைவிகள் அந்த உறவு முறையை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் விசாரித்தால் அதை கணவர்கள் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்களது கணவரின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் சாதாரணமாக ஒரு நண்பரை போல் அதே நேரத்தில் கேட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, நான் கவலைப்படமாட்டேன் என்ற நம்பிக்கையை கணவருக்கு ஏற்படுத்திவிட வேண்டும். நீங்கள் தன்னை பற்றி தவறான அபிப்பிராயத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தான் கணவர்கள் கடந்த கால உண்மைகளை மறைப்பார்கள்.

2. சமூக வாழ்க்கை

சமூக வாழ்க்கையையும் கணவர்கள் மனைவியிடம் மறைப்பது உண்டு. ஒரு அளவு வரை தான் இதை பற்றி பேசுவார்கள். பெண்கள் உள்ளிட்ட பலரிடம் அவர் நட்பு வைத்திருக்கலாம். இத்தகைய பெண்கள் குறித்து உங்களிடம் பேசினால் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை மறைத்துவிடுவார்கள்.

3. மென்மையான சுய மதிப்பீடு

முறிந்த காதல் குறித்து ஆண்கள் மனைவிகளிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. இதை ஏற்கமாட்டார்கள். ஆனால் சிலர் இது குறித்து வெளிப்படையாக பேசிவிடுவார்கள். மறைப்பதற்கு ஆண்களின் ஈகோ தான் காரணம். ஆனால் இது ஒரு மென்மையான விஷயம். மனைவிக்கு கிடைத்த சிறந்த காதலராக தன்னை காட்டிக் கொள்வார்கள். இதற்கு முன்பு நான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும் மறைப்பார்கள். இது ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு குணாதிசியம்.

4. உடல் மீது அவநம்பிக்கை

ஆண்கள் எப்போது தங்களது உடலில் கவனம் செலுத்துவார்கள். நான் எப்படி இருக்கிறேன் அல்லது இது தொடர்பான கேள்விகளை கூட உங்களிடம் கேட்கமாட்டார்கள். அவர்களது மனதில் சொந்த உடல் குறித்த அவநம்பிக்கை இருக்கும். எனினும் பெரும்பாலானவர்கள் தன்னை பற்றி கேட்டு தெரிந்து கொள்வார்கள். என்னை எந்தளவுக்கு விரும்புகிறாய்?, நான் எந்தளவுக்கு ஈர்க்கப்பட்டுள்ளேன்? என்பதை கேட்டு தெரிந்துகொள்வார்கள். நீங்கள் இதற்கு பதிலளித்து பேசிவிட்டால் அவர்களுக்கு தன் நம்பிக்கை துளிர்விட்டுவிடும்.

5. அச்சம்

ஆண்களுக்கு உங்களது இழப்பு குறித்த அச்சம் அதிகம் இருக்கும். ஆனால் அதீத ஈகோ காரணமாக அதை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களும் உங்களை போலவே இழப்பின் மீது அச்சம் இருக்கும். ஆண்கள் இதை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் போது இதை தெரிவிப்பார்கள். நீங்கள் அவரை இணங்கச் செய்யும் வரை அவர்களது உண்மையான உணர்வை மறைந்துதான் வைத்திருப்பார்கள்.

6. சார்ந்திருத்தல்

அவர் உங்களை சார்ந்திருப்பதாக எப்போது உணரச் செய்யவிடமாட்டார். அதை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் உண்மையிலேயே அவர் உங்களை சார்ந்து தான் இருப்பார்கள். மன ரீதியாக மட்டுமின்ற உடல்ரீதியாகவும் இந்த நிலை தான் இருக்கும். இதற்கு அவர் அணியும் ஆடையை கூட கூறலாம். பேன்ட் போன்றவற்றை அவர் அணியலாம். ஆனால் உள்ளாடைகள் விஷயத்தில் அவர் உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.
இதற்கு மனைவி அல்லது வேறு யாரேனும் உதவியாக இருந்தாக வேண்டும். அவர்களுக்கு மனைவியின் உதவி கண்டிப்பாக தேவை. அதே சமயம் தன்னை பலவீனமாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

அதனால் மனைவிகள் எப்போது கணவருக்கு காதலியாக, நண்பராக எப்போது இருக்க வேண்டும். இதை செய்தால் கணவர் இன்னும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதை பார்க்க முடியும். தன்னிடம் உள்ள ரகசியங்களையும் மறைக்கமாட்டார்கள்.

7. அவரது கற்பனைகள்

பொதுவாக இதை இந்த பட்டியலில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆம், அவர் தனது கற்பனைகளை உங்களிடம் மறைப்பார். அனைத்தையும் கிடையாது. சிலவற்றை மறைப்பார்கள். இதை நிறைவேற்ற உங்களால் உதவ முடியாது என்று அவர் நினைப்பது தான் இதற்கு காரணம். அதனால் அத்தகைய கற்பனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவரது கற்பனைகளை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். அந்த கற்பனைகள் அவருக்கு பல இரவுகளின் கனவாக கழிந்திருக்கும்.
இதில் அவர் உண்மையாக இருக்க வேண்டுமா?. கணவருடன் செக்ஸில் ஈடுபடும் போது உங்கள் குறித்த கற்பனைகளை அவர் கூறுவதற்கான வாய்ப்புகளை அவருக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எனவே இப்போது என்ன் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இது போன்ற விஷயங்களை தான் உங்களது வாழ்க்கை துணை உங்களோடு பகிர்ந்து கொள்மாட்டார். அவரை நீங்கள் உரிய முறையில் அணுகி இணங்கச் செய்யும் வரை மவுன சாமியாராக தான் இருப்பார்.

Loading...

Related Posts

About The Author

Add Comment