மேஷத்திற்கு டென்சன் இன்றைய ராசிபலன்..

 

சென்னை: சித்திரை மாதம் 25ஆம் நாள் மே 8ஆம் தேதி இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்கலாம். powered by Rubicon Project மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன் கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசில் சனி பகவான், மகரத்தில் சந்திரன், கேது, செவ்வாய் மீனம் ராசியில் புதன் என அமர்ந்துள்ளனர். மனோகாரகன் சந்திரன் மகரம் ராசியில் ஞானகாரகன் கேது, புரட்சி கிரகம் செவ்வாய் உடன் இணைந்து அமர்ந்துள்ளார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு எட்டாமிடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு எந்த ராசிக்காரர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.

மேஷம் மேஷ ராசிக்காரர்களே… 10ஆவது வீட்டில் சந்திரன் இருந்தாலும் சின்னச் சின்ன டென்சன்கள் ஏற்பட்டு காலையிலேயே மூடு அப்செட் ஆகும். விருந்தினர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். இன்று உங்களின் முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்தாலும் தேர்தெடுத்து பணி செய்தால் பதற்றம் இல்லாமல் வேலை செய்யலாம். யாருக்கும் பணம் தொடர்பான வாக்குறுதி கொடுப்பதற்கு முன்னால் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும். இன்றைக்கு சுமாரான நாள்தான்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களே… 9ஆம் வீட்டில் சந்திரன் இருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். தாராளமாக பணம் கைக்கு வரும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் துணையுடன் சின்னச்சின்ன ரொமான்ஸ்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் காதல் துணைக்கு இடையே வேறு நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

கடகம் சந்திரன் 7வது இடத்தில் இருப்பதால் உங்களுக்கு இன்றைக்கு எதிர்பாராமல் செலவு ஏற்படும் இன்று புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். பணியிடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையால் உதவிகள் கிடைக்கும்.

சந்திரன் 7வது இடத்தில் இருப்பதால் உங்களுக்கு இன்றைக்கு எதிர்பாராமல் செலவு ஏற்படும் இன்று புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். பணியிடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணையால் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம் ஆறாவது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்து செலவு செய்யுங்கள். கடன் வாங்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் களவு போக வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் ரொமான்ஸ் ஆன நாள் இது. வாழ்க்கைத்துணையுடன் குதூகலமாக பொழுதை போக்குவீர்கள்.

கன்னி சந்திரன் 5வது வீட்டில் அமர்ந்துள்ளதால் பிள்ளைகள் மீது ஒரு கண் வைக்கவும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மகிழ்ச்சியடையும் அளவிற்கு அளவிற்கு வேலை சுலபமாக முடியும். பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வேலை வேலை என்று ஓடுவதால் வீட்டில் உள்ளவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் செயல்படவும். இல்லையெனில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடும். காதல் கனவில் மிதக்கும் நாள் இது.

துலாம் இன்றைக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அதற்காக சற்று சிரமம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் உங்களுக்கு கவலை ஏற்படும். சொந்த பிசினஸில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம் இன்றைக்கு மிகவும் அழகான சிறப்பான நாள். ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் பொருளாதார வளம் சிறப்பாகவே இருக்கும். உங்களின் பர்சனாலிட்டி அதிகரிக்கும் வாழ்க்கை துணையுடன் சின்னச் சின்ன சச்சரவு ஏற்படும்.

தனுசு இன்று ரொமான்ஸ் ஆன நாள். உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு. வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும். ரொமான்ஸ் அனுபவங்களால் உற்சாகம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை துணை தரும் பரிசு சிறப்பானதாக இருக்கும்.

மகரம் சந்திரன் உங்கள் ராசிக்குள் இருந்தாலும்,மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். விலைமதிப்பு மிக்க பொருட்கள் மீது கவனம் தேவை.

கும்பம் 12ஆம் வீட்டில் சந்திரன் இருப்பதால் உறக்கம் தடைபடும். யாருடனும் சண்டை போட வேண்டாம். இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து போனால் நல்லதே நடக்கும்.

மீனம் லாப ஸ்தானத்தில் சந்திரன் இருந்தாலும் மனதில் சஞ்சலங்கள் அதிகமாகவே இருக்கும்.முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். பணியிடத்தில் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் காதல் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

Loading...

Related Posts

About The Author

Add Comment