மெகா பொலிஸ் திட்டம் இன்று ஆரம்பம்

மெகா பொலிஸ் வேலை திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படும் என்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இந்த வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.

நாட்டின் பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டமான இது, 15 ஆண்டுகளில் செயற்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 40 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறி இருந்தார்.

Related Posts

About The Author

Add Comment