மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இன்று ஆலோசனை பெறப்படும்

புதிய அரசியலமைப்பு குறித்து கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமாக மக்கள் கருத்துக்களை பெறும் குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று(29) பிற்பகல் 3.30 மணியளவில் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அந்தக் குழுவின் பிரதிநிதிகள் செல்லவுள்ளனர்.

மத குருமார்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவரிடம் சென்று கருத்து பெறுவதற்கு அந்தக் குழு தீர்மானித்துள்ளது.

கொழும்பு மாவட்ட மக்களின் ஆலோசனைகளை பெறும் நடவடிக்கைகள் அண்மையில் நிறைவு பெற்றதுடன், ஏனைய மாவட்ட மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related Posts

About The Author

Add Comment