உங்களுக்கு தெரியுமா காகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….?

காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறோம் காகம் செய்யும் சில செய்ல்களை கொண்டு, அவை நல்லதா கெட்டதா என கூறுவதுண்டு. மேலும் ‘காக்கைபாடினியார்’ எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் பாடியுள்ளார்.
பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும். பயணிக்கும் அன்பரை நோக்கிக் காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.

ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால்,  பயணத்தின்போது அவருக்கு அகால மரணம் நேரிடலாம்.
அதே நேரம், பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், அந்தப் பயணத்தால் பலவிதமான தன லாபம் ஏற்படும். வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால், பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.
யாத்திரை புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையிலான லாபம் பயணத்தில் கிட்டும். உதாரணமாக, சிவப்பு நிறப்பொருள் தங்கம் வகையிலான லாபத்தையும், வெண்ணிறப் பொருள் வெள்ளி லாபத்தையும், பஞ்சு போன்றவை வஸ்திர லாபத்தையும் குறிக்கும். இவ்வாறு உள்ள பொருட்களை அந்த இடத்திலிருந்து காகம் எடுத்துச்செல்வதுபோல் கண்டால், அந்தந்த வழிகளில் நஷ்டம் ஏற்படும்.
காரணமின்றிக் கரைந்து ஒலியெழுப்பும் காகம், பஞ்சம் வரப் போவதையும், காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையையும், இரவில் அசாதாரணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதையும் சகுனமாக அறிவிக்கும்.
காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

Related Posts

About The Author

Add Comment