கல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியில் சடலம் மீட்பு

கல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூலித் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் பெரியகல்லாறு 3ஆம் பிரிவைச் சேர்ந்த தம்பிராஜா வரதராஜன் (வயது-44) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை நகரில் பழக்கடையொன்றில் தொழிலாளியாக வேலை செய்கின்ற இவர் கல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து கீழே வீழுந்திருக்கலாம் எனவும் அதனால் அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தின்போது அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

அவரது தலையில் பெரியளவில் அடிபட்ட இரத்தக் காயம் காணப்படுகிறது எனவும் விசாரணைகள் மூலமே மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts

About The Author

Add Comment