2018.06.07 இன்றைய ராசிபலன்

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
சம்பள உயர்வு பற்றிய சந்தோ‌ஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்
செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். திடீர் இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும்.

மிதுனம்
வருமானம் பெருகும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். திடீர் பயணம் திகைக்க வைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.

கடகம்
வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். புதிய நண்பர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

சிம்மம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மனக்குழப்பம் அகலும்.

கன்னி
கலக்கம் அகலும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். தொழில் விருத்தி உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.

துலாம்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும்.

விருச்சகம்
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சியில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புதுமுயற்சி கைகூடும். பால்ய சிநேகிதர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

தனுசு
சகோதர வழியில் சந்தோ‌ஷமான தகவல் வந்து சேரும் நாள். வாகன யோகம் ஏற்படும் நாள். வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த வி.ஐ.பி.க்களை நாடிச் செல்வீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உத்தியோக அனுகூலம் கிட்டும்.

கும்பம்
பிரச்சினைகள் தீரும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும்.வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்
தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். பகையான நட்பு ஒன்று உறவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. மருத்துவச் செலவு உண்டு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related Posts

About The Author

Add Comment