2018.06.13 இன்றைய ராசிபலன்

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

மேஷம்
ஒற்றுமை பலப்படும் நாள். வரவு இருமடங்காகும். சொந்தங்களால் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வளர்ச்சிப் பாதைக்கு நண்பர்கள் வழிவகுப்பர்.

ரிஷபம்
போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும் நாள். நட்பு வட்டம் விரிவடையும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வியாபாரத்தில் சில புதுமைகளைப் புகுத்துவீர்கள். குடும்ப அமைதி கூடும்.

மிதுனம்
வரவு திருப்தி தரும் நாள். பங்காளிகளிடம் ஏற்பட்ட பகை அகலும். பெற்றோர்களின் ஆதரவு கூடும். இடமாற்றம் இனிமை தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். அரசியல் அனுகூலம் உண்டு.

கடகம்
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் சேரும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்
வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். நெருக்கடி நிலை அகலும். நெஞ்சம் மகிழும் நண்பர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி குறிக்கோளோடு செயல்படுவீர்கள்.

கன்னி
புதிய யுக்திகளைக் கையாண்டு பொருளாதார விருத்தியைப் பெருக்கிக் கொள்ளும் நாள். தொழில் வளம் மேலோங்கும். கடந்த சில நாட்களாக மன அமைதிக்குறைவை ஏற்படுத்திய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.

துலாம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். வீடு தேடி வரும் புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. காலை நேரத்தில் திடீர் பயணங்களும், விரயங்களும் ஏற்படலாம்.

விருச்சகம்
எதிர்பாராத செலவுகள் ஏற்படும் நாள். இல்லத் தேவைகளை எப்படியாவது பூர்த்தி செய்துவிடுவீர்கள். குடும்ப அமைதி கூட குலதெய்வப் பிரார்த்தனைகளை மேற்கொள்வது நல்லது. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

தனுசு
வியாபார விருத்தி ஏற்படும் நாள். முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். நேற்று கைநழுவிச் சென்ற தொழில் வாய்ப்புகள் இன்று கைகூடிவரும்.

மகரம்
அச்சமின்றிச் செயல்படும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.

கும்பம்
வம்பு வழக்குகள் அகலும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். திருமணப் பேச்சுக்கள் கைகூடும். புதுமுயற்சிகளில் ஈடுபடும்பொழுது வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

மீனம்
இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். இடம், பூமி சேர்க்கை உண்டு. கடன்சுமை குறையும். கடித அனுகூலம் உண்டு.கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Loading...

Related Posts

About The Author

Add Comment