சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம்

இலங்கையில் பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடக்கவுள்ள, சுதந்திர தின வைபவத்தின் போது தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடவேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன அறிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழனன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழுவினால் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த சேனரட்ன தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

Related Posts

About The Author

Add Comment