தந்தையின் வினோதமான கடைசி ஆசை! ஆசையை நிறைவேற்றிய மகன் !!

இறந்த தந்தைக்காக விலை உயர்ந்த காரை புதியதாக வாங்கி, அந்த காரில் அப்பாவின் உடலை அடக்கம் செய்த மகன். புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி உடலை அடக்கம் செய்த மகன்.

நைஜீரிய நாட்டில் அசுபுயுகி என்பவர் வாழ்ந்து வருகிறார்.  இவர் அந்தப்பகுதியில் மிகப்பெரும் செல்வந்தர் ஆவார். சில நாட்களுக்கு முன் அசுபுயுகியின் தந்தை மரணமடைந்தார். இதனை தொடர்ந்து அவரை அடக்கம் செய்வதற்காக விலை உயர்ந்த புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளர். 

அந்த காரின் உள்ளே தன் தந்தையின் உடலை வைத்து  அதனை சவப்பெட்டியாக பயன்படுத்தி  காருடன் பூமிக்குள் அடக்கம் செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த காரின் மதிப்பு சுமார் 66,000 டாலர் ஆகும். இந்திய மதிப்பு படி ரூ.66 லட்சம் ஆகும்.

தனது தந்தை உயிரோடு இருக்கும் போது கடைசி ஆசையாக, தான் இறந்த பிறகு தனது உடலை புதிய பிஎம்டபிள்யூ காரை வாங்கி அதில்தான் தன் உடலை வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று மகனிடம் கூறி இருக்கிறார்.

அவருடைய ஆசையை உயிரோடு இருக்கும் போதே என்னிடம் தெரிவித்ததால் தான், தன் தந்தையின் ஆசையை தான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று அசுபுயுகி கூறியுள்ளார். 

Loading...

Related Posts

About The Author

Add Comment