வானத்தில் இருந்து கொட்டிய இறைச்சி துண்டுகள்…

இந்த உலகம் பல ஆச்சரியங்கள் சூழ்ந்த ஒரு இயற்கை ஆமைப்பை கொண்டுள்ளது. மனிதனால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சில விசித்திர பொருட்களும், சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

1876ல் பெய்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் கென்ட்டகி (Kentucky) என்ற மாகாணத்த்தில் இறைச்சி மழை ஒன்று பெய்துள்ளது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் ஒரு நாள் காலையில் திடீரென பெரிய பொருள் வீட்டில் பொத்தென்று விழும் சத்தம் மக்களை அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது.இதை வெளியில் வந்து பார்த்த பொதுமக்கள் இறைச்சி துண்டுகளை பார்த்து அதிர்ந்துள்ளனர்.

இது பற்றி சிலர் கூறுகையில்,

காலை 11 மணிக்கு சிகப்பு நிற வெளிச்சத்தோடு மின்னி அதிக சத்ததோடு கீழே நிறைய விழுந்தது. பின் வீட்டின் முன் வந்து பார்த்தேன், சாலை, மரம், வேலி, வீட்டின் கூரை, வாகனங்கள் ஆகிய அனைத்திலும் இறைச்சி துண்டுகள் கிடந்தன. மழையும் பெய்யவில்லை. எப்படி இது வந்தது என்று தெரியவில்லை.மூன்று அங்குலம் அளவிற்கு கிட்டதட்ட பத்து நிமிடங்களாக இறைச்சி துண்டுகள் விழ ஆரம்பித்தது. ஏதோ ஆலங்கட்டி மழைதான் பெய்தது என்று நினைத்தோம். ஆனால் மழை பெய்யவில்லை. வெயில் தான் அடித்துக் கொண்டிருந்தது என்றனர்.மக்கள் இதை தொட்டு பார்த்த போது அது இறைச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை. வேறு என்னவாக இருக்கும் என்று பார்க்க ஒருவர் கடித்து சாப்பிட்டும் பார்த்துள்ளார்

இறைச்சி துண்டுகளை ஆராய்ச்சிக்கு அனுப்பி வைத்தனர். அதனை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இது நிச்சயமாக கறித்துண்டுகள் இல்லை. வானத்தின் மேல் இருக்கும் விண்கற்கள் பூமியின் புவீஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு டெம்ப்பரேச்சரால் எரிந்து எடை குறைந்து பூமியின் இப்பகுதியில் விழ்ந்திள்ளது என்று கூறியுள்ளனர்.

Related Posts

About The Author

Add Comment