வார ராசி பலன் : மிதுனம்

ஜூன் 29 – ஜூலை 5

(மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் யாவும் மெதுவாகத்தான் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளில் எதிர்பார்த்த வருமானங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை முடிக்க முயலுங்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக முடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். புதிய குத்தகைகள் எடுக்கும் எண்ணம் மேவோங்கும்.

அரசியல்வாதிகள் தேவையற்ற பேச்சு மற்றும் அணுகுமுறையால் தொண்டர்களின் அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பணவரவுக்குக் குறைவு இராது. பெண்மணிகளுக்கு பண வரவு இருக்கும். பேச்சில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 29, 2.

Related Posts

About The Author

Add Comment