“சந்திராஷ்டமம்” என்றால் என்ன?

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் ஆகும். ஜோதிட வானியல் கலையின்படி மனதை கட்டுப்படுத்தி, அறிவுத்திறனை நிர்ணயிக்கும் கிரகம் சந்திரனாகும்.

எப்போது எல்லாம் சந்திரன் ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கின்றாரோ அப்பொழுது எல்லாம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு அறிவுத் திறனும், மனோ பலமும் குறையும் வாய்ப்பு உள்ளது என பழைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

எனவே, சந்திராஷ்டம தினங்களில் அறிவுத்திறன் குறைவதால் அத்தகைய நேரங்களில் முக்கியமான விஷயங்களில் நாம் தவறான முடிவு எடுப்பதற்கு சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளது.

சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன்.செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன். மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும். அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறப்படுகிறது.

ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம தினத்தில் தேவையின்றி யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்யக் கூடாது. சந்திராஷ்டம தினத்தில் சுப காரியங்களில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைக்க வேண்டும். மேலும் சந்திராஷ்டம தினத்தில் முக்கிய முடிவுகளையும், ஆலோசனைகளையும் சம்பந்தப்பட்ட ராதசிக்குரிய நபர்கள் எடுத்தல் கூடாது.

சந்திராஷ்டம தினத்திற்கு முந்தைய தினம், பிந்தைய தினம் என ஆக மொத்தம் மூன்று நாட்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றது.

Related Posts

About The Author

Add Comment