கிண்டல் செய்தவர்களுக்கு ஸ்ருதியின் அதிரடி.

சூர்யாவின் S3 மற்றும் பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இப்போது நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
பிரேமம் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சராக ஸ்ருதி நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்தே, இணைய வாசிகள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், “சாய் பல்லவி அனைவரையும் கவரும் அளவிற்கு நன்றாகவே நடித்திருந்தார் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை பல்வேறு ரீமேக் படங்களில் நடித்துள்ளேன். அதில் நடிக்கும் போது மற்ற மொழிகளில் நடித்தவர்கள் பற்றி நான் நினைத்து கூட பார்க்கமாட்டேன். படம் வெளியாகும் வரை காத்திருந்து பின்னர் என்னுடைய நடிப்பு பற்றி கருத்து சொல்லுங்கள்” என கூறியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment