தென்னை மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாரவில, பத்தினிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

41 வயதுடைய மாரவில, கடுவத்தை, ஹால்பான்வில பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts

About The Author

Add Comment