மலேசியாவில் விக்ரமுடன் இணைந்த நயன்தாரா!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் இரு முகன் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத தொடக்கத்தில் மலேசியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை விக்ரம் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது இரு முகன் செட்டில் நயன்தாரா இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிப்ரவரி மாதம் முழுவதும் அங்கு படமாகவுள்ளது. ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Related Posts

About The Author

Add Comment