தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு வெளியீடு இறுதி நேரத்தில் இடமாற்றம்! அரசியல் அழுத…

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு வெளியீடு யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இருந்து மாற்றப்பட்டுள்ளது.

எனினும் திட்டமிட்டபடி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் அரசியல் தீர்வு திட்ட வரைபு வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டுக்கான அழைப்பிதழ்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு, சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி விட்ட நிலையில் வெளியீட்டுக்கு ஒரு நாள் இருக்கும் முன்னர் இடம்மாற்றப்பட்டமை பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அரசியல் அழுத்தம் காரணமாகவே இறுதி நேரத்தில் இடம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்ததாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

About The Author

Add Comment