மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து தகாத முறையில் கொடூர கொலை.!

மத்தியபிரதேச மாநிலம் ரசூல்பூர் கிராமத்தில் கடந்த குடியரசு தினத்தன்று சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டையில் இருந்து ஒரு பெண்ணின் முணங்கல் சத்தம் கேட்டதாக அந்த வழியாக சென்ற ஒருவர் அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் அந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் அந்த சாக்கு மூட்டையினுள் ஒரு இளம் பெண் அரை நிர்வாண கோலத்தில் குற்றுயீராக கிடந்தை பாரத்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், அந்த கிராமத்தில் இருந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் சரிதா என தெரியவந்துள்ளது. ரசூல் பூர் கிராமத்தில் கணவனுடன் வசித்து வந்துள்ளார்.

சில நாட்களாக கணவரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதற்காக தன்னுடைய கணவரிடம் இருந்து விவகாகரத்து வேண்டும் என்று ஷேகோர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று நாஜ்கிரிக்கு தனது தாயார் வீட்டுக்கு செல்வதற்காக பஸ் ஏற பேருந்து நிறுத்ததில் நின்று உள்ளார்.

அப்போது அவரது கணவர் பப்பு தனது நண்பர்கள் 7 பேருடன் வந்து சரிதாவை வலுகட்டாயமாக ஜீப்பில் ஏற்றி கொண்டு சென்று உள்ளார்.
பின்னர், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சரிதாவை அவருடைய கணவர் கொண்டு சென்று உள்ளார்.

அங்கே மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து உள்ளார். ஒரு கட்டத்தில் சரிதா சுயநினைவிழந்துவிட்டார். அப்பொழுது, அவரது கணவர் சரிதாவை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், அவர் இறந்து விட்டதாக கருதிய சரிதாவை ஒரு சாக்கு பையில் கட்டி ரசூல்பூர் கிராமத்தின் சாலையோரம் வீசி சென்று உள்ளார் என்று விசாரணையில் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது, சரிதாவின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது கணவர் மற்றும் நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Posts

About The Author

Add Comment