பிம்பிளை போக்கும் இயற்கை வைத்தியம் !!!

பிம்பிளைப் போக்க பலரும் கடைகளில் பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைக்காது. ஆனால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் பிம்பிளைப் போக்கும் சக்தி கொண்டது. இந்த பொருட்களை பயன்படுத்தி நிச்சயம் உங்கள் முகத்தில் உள்ள பிம்பிளை விரைவில் போக்கலாம்.

• ‪#‎கடுகில்‬ பிம்பிளைப் போக்கும் சாலிசிலிக் அமிலம் உள்ளது. 1/4 டீஸ்பூன் கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால், ஒரே வாரத்தில் பிம்பிள் போய்விடும்.

• ‪#‎க்ரீன்‬ டீ செய்து, அதனை ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அவற்றைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள பிம்பிள் இருந்த இடம் காணாமல் போய்விடும். •‪#‎பூண்டு‬ பிம்பிளை உருவாக்கும் கிருமிகளை அழித்துவிடும். அதற்கு பிம்பிள் உள்ள இடத்தில் ஒரு துளி பூண்டு சாற்றினை தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். ஆனால் நன்கு பழுத்த பிம்பிளை குணப்படுத்த முடியாது.

• ‪#‎ஆப்பிள்‬ சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, பிம்பிள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், பிம்பிள் விரைவில் மறையும். ஆனால் ஆப்பிள் சீடர் வினிகரை முகம் முழுவதும் தடவ வேண்டாம், இல்லையெனில் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தடவுங்கள்.

• #1 டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி பொடியில் சிறிது லாவெண்டர் எண்ணெய் மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ பருக்கள் நீங்கி, முகப்பொலிவும் அதிகமாகும்.

• ‪#‎இரவில்‬ படுக்கும் முன் சிறிது எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த நீரை முகத்தில் தடவி, மறுநாள் காலையில் பார்த்தால், முகத்தில் உள்ள பிம்பிள் காய்ந்து உதிர்வதைக் காணலாம். முக்கியமாக சிலருக்கு எலுமிச்சை சாறு அலர்ஜியை ஏற்படுத்தும், அத்தகையவர்கள் இம்முறையைத் தவிர்த்து வேறு முறையைப் பின்பற்றுவது நல்லது.
[img]http://www.tamilarnet.com/wp-content/uploads/2016/01/dc83ca4a-31d9-450d-bcdf-0943c3bab747_S_secvpf.jpg[/img]

Related Posts

About The Author

Add Comment