எப்.யூ.ரீ.ஏ.வின் புதிய அதிகாரிகள் சபை தெரிவு

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் புதிய அதிகாரிகள் சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் களனிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வருடாந்த ஒன்று கூடலின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் புதிய தலைவராக மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் ரங்கிக கல்வதுரவும், செயலாளராக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஷாயாம பஸ்நாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அச் சங்கத்தின் புதிய பொருளாளராக களனிய பல்கலைகழகத்தின் குமுது சுமேதா தேர்வாகியுள்ளார்.

Related Posts

About The Author

Add Comment