சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி

அனைத்து இடங்களில் இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு அனைத்து அரச, தனியார் கட்டடங்கள், வாகனங்கள், வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரச கட்டடங்களிலும் நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு சகல அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அமைச்சு இதுதொடர்பில் சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று மாலை காலி முகத்திடலில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில்  பாதுகாப்புப் படையினரின் இசைக்குழுவினர் ‘சுதந்திரத்தின் இதய துடிப்பு’ என்னும் தொனிப்பொருளுடன் இசைக்கச்சேரி நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

AR

Related Posts

About The Author

Add Comment