எம்பிலிபிடிய சம்பவம் – நீதிமன்ற உத்தரவின் பின்னும் எவரும் கைதுசெய்யப்படாதது ஏன்?

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், எம்பிலிபிடிய சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாமை தொடர்பில், மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, இன்று கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு, இன்று தமது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக, ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த குழுவினரால் சில தரப்பினரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலங்களை கருத்தில் கொண்டு, இது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு, எம்பிலிபிடிய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

எனினும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்கும் அதிக காலம் கடந்துள்ள நிலையில் இன்னும் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

Related Posts

About The Author

Add Comment